இனவாத இயக்கங்கள், இன ஐக்கியத்தை சீர்குலைக்க இடமளிக்க கூடாது - பிரதமர் வலியுறுத்தல்


உயிர்த்த தாக்குதலுக்கு பின்னர் முதற்தடவையாக நாட்டில் சகல இனங்களும் ஐக்கியப்பட்ட போதும், அரசியல் நோக்கம் கொண்ட சில சந்தர்ப்பவாதிகள் ஒற்றுமையை சீர்குலைக்க முனைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் : நான் மூன்று பௌத்த பீடங்களின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மல்வத்தை பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்த தேரரின் கருத்தை ஏற்பதோடு நாம் அனைவரும் பிரியாது மீண்டும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நாடு சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் முஸ்லிம் அமைச்சர்களின் ஒத்துழைப்போடு ஒன்றிணைந்து இருந்தார்கள். போரின்போதும் அவர்கள் இருந்ததோடு தமிழ் அமைச்சர்களையும் நியமித்து, இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளோம் என்றும் கூறினார்.

அதுவே சிங்கள மக்களுக்கு உள்ள சிறந்த பாதுகாப்பு என அவர் கூறினார். நாம் அனைவரும் மீண்டும் ஒன்றுபடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் . அரசியல் இயக்கங்கள் தொடங்கப்படும் பட்சத்தில், நாம் அவற்றை எதிர்கொள்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

இனவாத இயக்கங்களுக்கு சில ஊடக நிறுவனங்கள் வழங்கிய ஆதரவு குறித்து நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். இது நாடு முழுவதும் பரவி உள்ள போதிலும் இதனை முழு நாடும் நிராகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.