சீரற்ற காலநிலை; டெங்கு பரவும் அபாயம்


நாட்டில் தொடரும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்பு உற்பத்தி மற்றும் நோய் பரவுதல் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் டெங்கு நுளம்பு அதிகம் பரவும் மாவட்டங்களுக்கு விசேட மருத்துவர் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் டெங்கு நுளம்பு அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்தார்.