மட்டக்களப்பில் அனர்த்த குறைப்பு கலந்துரையாடல்ஆசிய அனர்த்த தயார்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட ஐந்து பிரதேச செயலக பிரிவுகளில் அனர்த்த குறைப்பு ,அனர்த்தத்திற்கு தயார்படுத்தல் மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை போன்ற பணிகளுக்கு ஆசிய அனர்த்த தயார்படுத்தல் நிலையம் முன்னாயர்த்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது


இதன் கீழ் ஆசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் ,நீர்ப்பாசன திணைக்களம் , அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், கட்டிட ஆய்வு நிலையம், வானிலை அவதான நிலையம் ஆகியன அனர்த்தத்திற்கு முன்னர், அனர்த்த வேலை, பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள், மக்களை பாதுகாக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது .


இந்த முன்னாயர்த்த நடவடிக்கைகளுக்கும் அரச திணைக்கள மற்றும் அலுவலக அதிகாரிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கான கலந்துரையாடல் உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது .


உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் ஆசிய அனர்த்த தயார்படுத்தல் நிலையத்தின் பணிப்பாளர் அனோமா டயஸ், அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிள்ளை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம் .எ .சியாத் , மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.