ஒரு மாதத்திற்குள் தீர்வு : கல்முனையில் ஞானசார தேரர்


கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து அவர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

என்னால் 5 நாளிலும் கல்முனையை தரமுயர்த்தி தர முடியும். ஆனால் விளைவுகள் மோசமாக இருக்கும். நிதானமாக இந்த நடவடிக்கையை செயற்படுத்த எனக்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள். அதற்குள் கல்முனையை நான் தரமுயர்த்தி தருவேன்“ என ஞானசாரர் தெரிவித்தார். இந்த பேச்சுக்கள் தற்போது நடந்து வருகிறது.

 எனினும், இன்று மதியம் 1 மணிக்கு போராட்டத்தை முடிப்பதென்றும், அவர் தரமுயர்த்தும் நடவடிக்கையை பொறுப்பேற்பார் என அறிவிப்பதென்றும் முடிவாகியுள்ளது

உண்ணாவிரத இந்த போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். அரசியல்வாதிகளின் இருவேடங்களை களைந்து நாம் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் நாம் செயற்படுவோம். ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்படவேண்டும்.விரைவில் இந்த பிரச்சினையை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன்.அந்த செய்தி மிக விரைவில் உங்களுக்கு கிடைக்கும் ”என்றார் ஞானசார தேரர் .



உண்ணாவிரதபோராட்டத்திலீடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை குறித்து கல்முனை வடக்கு பிரதேச செயலக விடே குழுவுடன் பிரதேச செயலக மண்டபத்தில் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அம்பாறை விகாரையின் விகாராதிபதி மற்றும் பல தேரர்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதி தீர்வு இன்று அறிவிக்கப்படுமென ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள பேதிலும் ஊடகங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்படவில்லை.

கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த 5 நாட்களாக பௌத்த துறவியுட்பட 5 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஞானசார தேரர், கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட்டமாக கருதி முடித்து வைக்கிறேன் என எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார் என அமைச்சர் மனோ கணேசன் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.