இலங்கையில் இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்க்கொள்ளக் கூடிய வசதி


எத்தகைய நேரத்திலும் இடம்பெறக் கூடிய இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்க்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இருப்பதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கை சேட் நிறுவனம் மற்றும் ஏனைய சில நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப பதிலளிப்பு மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இதனை தொடர்ச்சியாக முன்னெடுத்து நாட்டின் தொழில் நுட்பத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித்.பி.பெரேரா மேலும் தெரிவித்தார்