வைத்தியர் ஷாபிக்கு எதிராக 723 முறைப்பாடுகள்



சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 723 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தத் தகவலை குருணாகல் போதனா வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல், குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தினமும் வைத்தியசாலைக்கு தாய்மார் வருகைதந்து முறைப்பாடு செய்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.