மட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது

மட்டக்களப்பு கல்லடி கடலில் 2 ம் உலகமாக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் கழற்றிய 3  வெளிநாட்டு பிரைஜகளை நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு கடற்படையினர் கைது செய்ததுடன் கப்பல் பாகங்கள் பிக்கப் ரக வாகனம் ஒன்று உட்பட  கடலில் சுழியோட பயன்படுத்திய உபகரணங்களை மீட்டு  தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கல்லடியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரைஜகள் 3 பேரை சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை  இரவு கைது செய்தனர் .

இவர்களிடம் இருந்து கடலில் தாண்ட யுத்த கப்பலின் பல  இலச்சம் ரூபா பெறுமதி வாய்ந்த  கப்பலின் எஞ்சின் பகுதியின் பாகங்கள் மற்றும் இதனை சுழியோடி  கழற்றுவதற்கான ஓட்சிசன் சிலின்டர்கள் நீச்சல் உடைகள் உ;பட பல உபகரணங்களை மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தகப்பன்,  மகன் மற்றும் ஓஸ்ரியநாட்டடைச் சோர்ந்தவர் உட்பட மூவராவார் இவர்கள் சுற்றுலா விசாவில் இலைங்கைக்கு வந்து  நீர் கொழும்பு பகுதில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து  பிக்கப்ரக வாகனம் ஒன்றில் மட்டு கல்லடி பகுதியில் வந்து தங்கி இந்த சட்டவிரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும

கடந்த 7 வருடங்களாக விடுமுறையில் இங்கு  வந்து இந்த கப்பல் தொடர்பாக நீரில் மூழ்கி அவதானித்து வந்தாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்