கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் கொண்டு வந்த அமைச்சர் குழுவினை துரத்திய மக்கள்



-பாறுக் ஷிஹான்-



கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தினர்.

இச்சம்பவம் இன்று(21) மாலை கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் சுமந்திரன் கோடிஸ்வரன் ஆகியோரை போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தூசித்து துரத்தினர்.

மேற்குறித்த அமைச்சர்களின் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை பொதுமக்களின் தாக்குதலில் இருந்து அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி அழைத்து சென்ற போதிலும் குறித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

மேலும் குறித்த பிரதேச செயலகம் தொடர்பாக அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கடிதங்களை பொதுமக்கள் போராட்டகாரர்கள் நிராகரித்து கிழித்து எறிந்தனர்.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உரிய தீர்வு கிடைக்க பெறாத விடத்து நஞ்சு குடித்து சாவதற்கு தயாராக உள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் போது அங்கு வந்த அமைச்சர் குழு கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் தெரிவித்து நகர்ந்தனர்.