கல்விச்சேவை ஊழியர்களின் சிக்கன கூட்டுறவு சங்க நிறைவேற்றுக்குழுவினனரால் அங்கத்தவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வு

(ரகு - ஆரையம்பதி )
கல்விச்சேவை ஊழியர்களின் சிக்கன கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிறைவேற்றுக்குழுவினர்  கிழக்கு மாகாண கல்வி கூட்டுறவுச்சங்கத்திற்கு வருகை  தந்து அங்கத்தவர்களின் பிரச்சனைகளை இனங்கண்டு  அவற்றிற்கான தீர்வுகளை ஆராய்ந்தனர்.

 கல்விச்சேவை ஊழியர்களின் சிக்கன கூட்டுறவுச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்  குகாதரன் தலைமையிலும் கிழக்குமாகாணக்கிளையின் பணிப்பாளர் செல்லத்துரை அவர்களின் ஒழுங்கமைப்பிலும் இந்நிகழ்வானது மிகச்சிறப்பாக நடைபெற்றது

 இந்நிகழ்விலே அகில இலங்கை கல்வி கூட்டுறவுச் சங்கத்தின்  புதிய பிரதான தலைவர் லலித் சமந்த விக்கிரமசிங்க ,பிரதான செயலாளர் மதிப்பிற்குரிய கிஷாந்த உபதலைவர் சதுரங்க உபசெயலாளர்களான  சமந்த குமார ரஞ்சித் வெலிகமகே  நிசாந்த ஆகியோர் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு வருகைதந்து அங்கத்தவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஆய்வு செய்தனர்