தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட நல்லிணக்க அமைச்சே கூடுதலான அபிவிருத்தியை மேற்கொண்டிருக்கிறது : தவிசாளர் கலையரசன்


(சா.நடனசபேசன்)

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட நல்லிணக்க அமைச்சே கூடுதலான அபிவிருத்தியை மேற்கொண்டிருக்கிறது. என முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்தார்.

 15ம் கிராமம் கண்ணகியம்மன் ஆலயத்தில் அரசகரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தா. ஜெயாகர் அவர்ளுடனான பிரதேச மக்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் உரையாற்றிய தவிசாளர் கலையரசன் அவர்கள்..

நாவிதன்வெளி பிரதேசத்தின்பல கிராமங்கள் யுத்தகாலங்களில் இராணுவத்தினராலும் ஊர்காவற்படையினராலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுஇ பொருளாதார வளங்களும் சூறையாடப்பட்டன அவற்றின்  
வடுக்களை இன்றுவரை சுமந்துகொண்டு இருக்கின்றது.


 சிங்கள  முஸ்லிம் கிராமங்களில் எல்லையில் அமைந்திருந்த தமிழ் கிராமங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டன அக்கிராமங்களுக்கு அபிவிருத்தி வாழ்வாதார உதவிகள்தான் நிகழ்கால தேவையாக இருக்கின்றது.

கல்வியில் பிரதேச மாணவர்கள் அபார திறமையை வெளிக்காட்டுகின்ற போதிலும் எமது தமிழ்ப்பாடசாலைக்கான வளங்கள் காலாகாலமாக புறக்கணிக்கப்பட்டுத்தான் வருகின்றன. இவற்றுக்கான முன்நடவடிக்கையை விரைந்து பெற்றுத்தர துறைசார் அமைச்சர்கள் ஆவன செய்யவேண்டும்.

மைதானங்கள் மயானங்கள் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறிப்பாக 2018 ம் ஆண்டு 25 மில்லியன் ரூபா நிதியை தந்தமைக்காக மக்கள் சார்பாக மனோகணேசன் அமைச்சருக்கும் இணைப்பாளருக்கும் நாங்கள்  நன்றி செலுத்துகின்றோம்.

மேலும் எமது பிரதேசத்து மக்களின் பொருளாதாரத்தை உயத்துவதன் மூலமே தமிழ் மக்களிடையே முன்னேற்றத்தை காணமுடியும் இவற்றிக்கு சுய தொழிலை மேற்கொள்ள நெசவு மற்றும் தையல் உபகரணங்களை வழங்குவதன் ஒரளவிற்கேனும் பொருளாதாரம் வலுப்பெறுவதோடு மாற்று சமூகத்திடம் மண்டியிடவேண்டிய அவசியமிருக்காது என சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில் ஆலத்தின் தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் இளைஞர்களும் கலந்துகொண்டு தங்களது சமூகத்தின் தேவைகளை இணைப்பாளர் மூலம் அமைச்சருக்கு கோரிக்கைகளை மனுக்கள் மூலம் கையளித்தனர்.