மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு.



( எரிக் )

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயமாக கருதப்படும் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் நேற்று புதன்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.

இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆலய முன்றிலில் ஆயர் தலைமையில் கொடியிறக்க பூஜைகள் நடைபெற்று கொடியிறக்கம் சிறப்பாக நடைபெற்றது.