சீயோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு



( அப்துல்சலாம் யாசீம்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏப்ரல் 21ம் திகதி குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றும் பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (20) கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது. 

கிழக்கு மாகாண ஊழியர்கள் நலன்புரி சங்கத்தின் (வெஸ்லோ) சமூக நலன் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் சீயோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த சிறார்கள் 13 பேருக்கு இவ்வுதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண ஊழியர்களின் நலன் புரிச் சங்கத்தின் (வெஸ்லோ) ஊடாக இரண்டு மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டு பதிமூன்று சிறார்களின் வயதுகளுக்கேற்ப அப்பணத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஊழியர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவி கே. கலாமதி பத்மராஜா தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.