சட்டத்தரணியாக சத்தியபிரமாணம்களுவாஞ்சிக்குடி மகிழூர் பாடசாலை வீதியை சேர்ந்த ஞானசேகரம் நிரோஜினி அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டத்தரணியாக 08.08.2019 அன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி பயின்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி அங்கு சட்டமானி பட்டத்தினை பூர்த்தி செய்து கொண்டார். மேலும் இவர் மகிழூர் கிராமத்தின் முதலாவது சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனது பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் பெருமையைதேடி தந்துள்ளார்.