எதிர்பார்பின் இளைஞர் முகாம்

 மு.கோகிலன்

மட்டக்களப்பு தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையில் இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச இளைஞர்களை ஒன்றினைத்து 'எதிர்பார்பின் இளைஞர் முகாம்' என்ற தொனிப்பொருளில் வதிவிட இளைஞர் முகாமாக   பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் நேற்று  மாலை ஆரம்பமானது.

பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் தலைமையில் நடைபெறும் இவ் முகாமானது தலைமைத்துவம், பொறுப்பு, நேர்மறை சிந்தனை, அறிவாற்றல் மற்றும் இளைஞர் யுவதிகள் மத்தியில் கடும்போக்குவாதம் வியாபித்தலை தடுத்தல், சமூகவலைத்தளங்களை சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல் என்பவற்றைம் மேலும் பல விடயங்களையும் உள்ளடக்கியதாக இப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடை பெறும் இப் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு இறுதி நாளன்று சாண்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இவ் நிகழ்வில் கோறளைபற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்த்தர் இ.சபியதாஷ் மற்றும் பல இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்