மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தினரால் ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தில் அன்னதான நிகழ்வு

[துறையூர் சக்தன்]
ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 65வது ஆண்டு விழாவின் இறுதி நாளை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தினரால் ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தில் அன்னதான நிகழ்வு 08-09-2019 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தினரால் ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி எஸ்.எம்.பி.எம். அஷார் ,நவகிரி பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி.எம்.பத்மதாசன் உறுகாமப் பிரிவு பகுதி உதவியாளர் எஸ். செல்வராஜ் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.