நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தம் (குறைப்பு) செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 2 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 2 இனாலும் குறைக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலை மாறாது எனவும், நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடையும் நிலையில் அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிப்பாட்டுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
விலை சூத்திரத்தின் அடிப்படையில் கடந்த மாதம், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டன, ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்
  • பெற்றோல் Octane 92 - ரூபா 138 இலிருந்து ரூபா 136 ஆக ரூபா 2 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 163 இலிருந்து ரூபா 161 ஆக ரூபா 2 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 134 இலிருந்து ரூபா 132 ஆக ரூபா 2 இனாலும் குறைக்கப்பட்டுள்ளன.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடையும் நிலையில் அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிப்பாட்டுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.