மட்டக்களப்பில் 193 புள்ளிகள் பெற்ற பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் களுவாஞ்சிகுடி  பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவி   பழனித்தம்பி  பவுஸ்தினி   193 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ஊரிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

களுதாவளையை சேர்ந்த பழனித்தம்பி கலைவாணி தம்பதியினரின் மகள் ஆவார் .  
தந்தை கூறுகையில் " நான் கட்டாரில் 4 வருடங்களாக குடும்பத்திற்காக வேலை செய்து வருகிறேன்.  மனைவி வீட்டில் மகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.  நான் வெளிநாட்டில் இருக்கும் போதும் இணையதளங்களில் தேடி மகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சை  தொடர்பான வினாத்தாள்கள்  மற்றும் ஏனைய விடயங்களை அனுப்பி வைப்பேன்  .  பரீட்சைக்காக வெளிநாட்டிலிருந்து வந்திருந்தேன் மீண்டும் போக போகிறேன் .எப்படியாவது மகளை  இதே போல் வருங்காலங்களிலும்  அக்கறையாக படிப்பிக்க வேண்டும் .  
பாடசாலைக்கும் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியருக்கும் எங்களது நன்றியைத்தெரிவிக்கிறோம்  என தந்தை கூறினார் .