உயர்தர கணிதபாட ஆசான் முத்தையா ஜெயாதி தனது 60 வயதில் ஓய்வு பிரியாவிடை வைபவம்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி உயர்தர கணிதபாட ஆசான் முத்தையா ஜெயாதி தனது 60 வயதில் ஓய்வு பெற்றார். இதனையொட்டி பாடசாலையில் பிரமாண்டமான முறையில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் ஆசிரியர் நலன்புரி அமைப்பினால் பிரியாவிடை வைபமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் 1959 .8. 27ஆம் திகதி பிறந்தார். ஆரம்ப கல்வியை கண்டி தெல்தோட்டை தமிழ் மகா வித்தியாலயத்திலும் , ஆண்டு 3 தொடக்கம் 5 வரை ஒந்தாச்சிடம் ஸ்ரீவினாயகர் வித்தியாலத்திலும் , 6 தொடக்கம் உயர்தரம் வரை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய கல்லூரியிலும் பயின்றார்.

1979- 1980 ஆண்டுகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை சிறப்பாக மேற்கொண்டு விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தனது கணிதத்திறமையை வெளிக்காட்ட 1984.4.16 பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று 5 வருடங்கள் சேவையாற்றினார். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யாழ்ப்பாணம் துரையப்பா மகா வித்தியாலயத்தில் 3 வருடங்களும் 1999 மே மாதம் முதல் கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரியில் 26 வருடங்களும் 2001 - 2014 வரை அக்கல்லூரியில் விஞ்ஞான கணிதத்துறை பகுதித்தலைவராகவும் ,2014 - 2018 அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் 2018 ஜனவரி மாதம் தொடக்கம் ஓய்வு பெறும் வரை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிபுடியிலும் தனது ஆசிரியர் பணியினை மேற்கொண்டிருந்தார்.

35 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்த முத்தையா ஜெயாதி ஆசிரியர் சீரும் சிறப்பும் பெற்று வாழ அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.