70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று – மக்களுக்கு அவசர எச்சரிக்கைகாலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக செல்லும் பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமென அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் உள்ள கடற்படையினர் மற்றும் மீனவர்களை பாதுகாப்பாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.