இளைஞர், யுவதிகளுக்கு அதிகூடிய வேதனம் கிடைக்கும் வகையில், தொழில்வாய்ப்புகள் : கோட்டாபய ராஜபக்ஷ

இளைஞர், யுவதிகளுக்கு அதிகூடிய வேதனம் கிடைக்கும் வகையில், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ராகமயில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுப்பதற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த இராணுவத்தினரை அபிமானத்தை அன்று தாம் பாதுகாத்ததாக அவர் கூறியுள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், அவர்களின் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதுடன், புலனாய்வு துறையினருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகள்மூலம்தான் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இராணுவத்தினரின் அபிமானத்தை மீண்டும் உயர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அரச ஊடகங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி அவர்கள் Nசுறுபூசுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தாய், மனைவி உள்ளிட்டோர் அமைச்சிலிருந்து செயற்படுகின்றனர்.

எனவே, கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும்போது, அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சஜித் பிரேமதாஸவுக்கு தான் கூறுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.