மாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி மாகாண  மட்டத்தில் முதல் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரி மாணவர்கள் மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகள் , கராட்டி , கரம் , எறிபந்து , விஞ்ஞான வினா விடை , சமூக விஞ்ஞான ,தமிழ் அறிவு வினாவிடை ,விவசாய விஞ்ஞானம் போன்ற போட்டிகளில் பங்கு பற்றி மாகான மட்டத்தில் முதல் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களை அதிபர் ஆசிரியர்கள் பாராட்டி வாழத்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக அதிகூடிய புள்ளிகளை பெற்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் இதில் 22 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் கல்லூரி அதிபர் திருமதி .பி .ராஜகோபால சிங்கம் தெரிவித்தார் .