சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கை



நுகர்வோரின் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு கூடுதலான விலைக்கு எரிவாயுவை (சிலின்டர்) விற்பனை செய்யும் வர்த்தகர்களை முற்றுகையிடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் அதிகரித்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கமுடியும்.

எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டிருந்த பொழுதும் விலையைக் குறைக்காமல் தொடர்ந்தும் அதிக விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது குற்றமாகும் என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 240 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.