வட கீழ் பருவ பெயர்ச்சி காலத்தினை எதிர்கொள்ள தயாராவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்


வட கீழ் பருவ பெயர்ச்சி காலத்தில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்களில் பிரதேச மட்டத்திலான வட கீழ் பருவ பெயர்ச்சி காலத்தினை எதிர்கொள்ள தயாராவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் முன்னாயத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் செயலக கேட்போர் கூடத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மாவட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எம்.ஹசீர், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.சிவநாதன், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.துகிதன் உட்பட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்கு வட கீழ் பருவ பெயர்ச்சி காலத்தினை எதிர்கொள்ள தயாராவதற்கான முன்னாயத்தம் தொடர்பிலான விளக்கங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் நிகழ்த்தப்பட்டது.