மட்டக்களப்பில் உலக உளநல தின விசேட விழிப்புணர்வு நடைபவனி

 உலக உளநல  தினத்தை  நினைவு கூறும்  வகையில்  சர்வதேச  நாடுகளில்   பல விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு அமைய தேசிய ரீதியில் அரச அதிபர்கள் தலைமையில் விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷனி ஸ்ரீகாந்த் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில்  “ தற்கொலை தவிர்ப்பு விழிப்புணர்வு “ எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நடை பவனியும் வீதி  நாடகமும் நடைபெற்றது


மாவட்ட செயலகத்துடன்  பிராந்திய சுகாதரா திணைக்களம் , மட்டக்களப்பு மாவட்ட உளவளத்துணை ஒன்றியம் , மண்முனை மேற்கு பிரதேச செயலக குடும்ப புனர்வாழ்வு நிலையம் ,  மட்டக்களப்பு , வாழைச்சேனை  சமுதாய சார் சீர்திருத்த திணைக்களம் , இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை , கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் ,  வை எம் .சி எ  . ஆகிய அமைப்புக்கள் மற்றும் திணைக்களங்கள் இணைந்து நடாத்தப்பட விழிப்புணர்வு நடை பவனியானது  இன்று காலை   மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது .

மட்டக்களப்பு இலங்கை போக்குக்குவரத்து பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமான நடை பவனியானது மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பமான நடை பவனி காந்தி பூங்காவை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வகையில் விழிப்புணர்வு வீதி நாடகங்களும் விசேட விழிப்புணர்வு கருத்துரைகளும்  இடம்பெற்றன .

இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்   பிராந்திய சுகாதரா திணைக்கள வைத்திய அதிகாரிகள்  ,மட்டக்களப்பு மாவட்ட உளவளத்துணை ஒன்றிய உறுப்பினர்கள்  , மண்முனை மேற்கு பிரதேச செயலக குடும்ப புனர்வாழ்வு நிலைய உத்தியோகத்தர்கள் ,  மட்டக்களப்பு , வாழைச்சேனை  சமுதாய சார் சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள்  , இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை , உறுப்பினர்கள்  ,கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் , உத்தியோகத்தர்கள்  வை எம் .சி எ  .உறுப்பினர்கள் ,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்