சீமெந்தின் விலை 100 ரூபாய் இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.



சீமெந்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் 995.00 ரூபாய் காணப்பட்ட சீமெந்தின் விலை 100 ரூபாய் இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சீமெந்து விலை 1095.00 ரூபாய்யாக உயர்த்தப்பட்டுள்ளது.

சீமெந்து இறக்குமதி சங்கத்தின் மூலம் சீமெந்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த விலையர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.