விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் திருத்த சட்ட மூலம் நிறைவேற்றம்



விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடியது. இதன் போது விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த திருத்த சட்ட மூலத்தை சமர்ப்பித்தார். இந்த சட்டத்திற்கு அமைவாக சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுவோருக்கும், உறவினர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு விளையாட்டுத்துறை நிர்வாக பணிகளில் இடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறான வழியிலும் சட்ட செய்ற்பாடுகளில் தவறு இழைத்தவராக காணப்பட்டால் அவ்வாறானோருக்கு நீதவான் நிதிமன்றம் ஒன்றில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் 10 வருட சிறைத்தண்டனை அல்லது 10 மில்லியன் ரூபா தண்டப்பணத்திற்கு உட்படவேண்டியிருக்கும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.