அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள் தகவல் சேகரிப்பு



(வி.சுகிர்தகுமார்)
வரலாற்றுச் சிறப்புமிகு அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள் ஆலய கும்பாபிசேக மலர் குழு நிருவாகத்ததுடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையவர்களை கௌரவிக்கும் நோக்குடனேயே இத்தகவல்கள் விரைவாக தேவைப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆலயத்தின் நூற்றாண்டு விழா 2020ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் நடாத்த ஆலய பரிபாலன சபையினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளமையை தொடர்ந்தே இத்தகவல்களை ஆலய கும்பாபிசேக மலர் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

நூற்றாண்டு விழாவின்போது வெளியிடப்படவுள்ள ஆண்டு மலர் வெளியீட்டின் போது ஆலயத்தின் ஆரம்பகால உறுப்பினர்களின் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெறவுள்ளமையை முன்னிட்டே இத்தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள் பலர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இதனால் இவர்களது தகவல்களை சேகரிப்பதில் ஆலய கும்பாபிசேக மலர் குழுவினர் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஆகவே அவ்வாறானவர்கள் தங்களது சேவைச்சான்றிதழ்களையோ அல்லது வரலாற்று ரீதியான ஆவணங்களையோ அல்லது தங்களது அனுபவ அற்புதங்களையோ ' த.கயிலாயபிள்ளை, மலர்க்குழுத் தலைவர், நாவலர் வீதி, அக்கரைப்பற்று 7,3' எனும் விலாசத்திற்கு கடிதம் மூலமாகவோ அல்லது 0773664282 எனும் இலக்கத்திற்கு தொலைபேசி மூலமாகவோ 2019.12.31 இற்கு முன்னர் அறியத்தருவதுடன் விழாவிலும் கலந்து கொண்டு கௌரவத்தினை பெறுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

மறைந்தவர்கள் சார்பில் அக்குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் கௌரவிக்கப்படுவதுடன் தங்களது தகவல்களை ஆலய நிருவாகத்தினர் ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலும் காலங்கடந்த தகவல்களும் ஆலய கும்பாபிசேக மலரில் இடம்பெறாது என்பதையும் அறியத்தருகின்றனர்.