லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு மக்களுக்கு நிவாரணம்.வழங்கி வைப்பு


(வி.சுகிர்தகுமார்)
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை அரசாங்கத்துடன் இணைந்து சமூகமட்ட பொது அமைப்புக்களும் அம்பாரை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுளம்பு வலை மற்றும் உலர் உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரணபபொருட்கள் நேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

வற்றிநியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன்  ஊடாக லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் வழங்கப்பட்ட 177,000 ரூபா நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பொருட்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று 7/4 மற்றும் வாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 80 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது . 
 
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொடுத்த ஆர்.சயனொளிபவன் பட்டிருப்பு வலய வெல்லாவெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் ரி.அருள்ராஜா , சங்காரவேல் பௌண்டேசன் அமைப்பின் பொருளாளர் என்.குபேந்திரன், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கி.சோபிதா மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் மு.பிரதீப் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரி.மோகனராஜா ஊடகவியலாளர் சுகிர்தகுமார் மற்றும் சிவதொண்டர் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.