வற்றிநியூஸ் ஊடாக லண்டன் சிவன் கோவில் நிதியில் நுளம்புவலை , உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு


வற்றிநியுஸ் ஊடாக லண்டன் சிவன் கோவிலின் நிதியில் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னதோட்டம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் தெரிவு செய்யப்படவர்களுக்கு நுளம்பு வலை , உலர் உணவு அடங்கிய வெள்ள நிவாரணம் பணி கடந்த சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது .

வற்றி நியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன் ஊடாக லண்டனில் உள்ள சிவன் கோவிலினால் திருக்கோவில் பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட 238,000 ரூபா நிதியில் ஒரு பகுதி திருக்கோவில் சின்னதோட்டம் பகுதியில் வழங்கப்பட்டது .

கிராம சேவை உத்தியோகத்தர் சடாச்சரன் தலைமையில் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கே.சதீஷ் , வற்றிநியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன் , கிராம சேவை உத்தியோகத்தர் இரா.ராஜரெத்தினம் , செட்டிபாளையம் சிவன் மகளிர் உயர் கல்வி நிலைய தலைவர் அருள்ராஜா , சங்காரவேல் பவுண்டேசன் பொருளாளர் ரி.குபேந்திரன் ,  நிரோஜன் , மயூரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

ஏனைய நிவாரண பணிகள்

லண்டன் சிவன் கோவில் அனுசரணையில் வற்றிநியூஸ் ஊடாக விநாயகபுரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு