மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா


(Leon)
 மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று  கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது

ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்கு தந்தை அருட்பணி றோசான் அடிகளாரினால் கொடியேற்றப்பட்டு ஆரம்பமான திருவிழா நேற்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுத்தனர் .

திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனிதரின் திருவுருவ ஆசீர்வாதத்துடன் கொடியிறக்கப்பட்டு ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது .

திருவிழா நிறைவில் இன்று  கல்வி பொது தராதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் ஆயரினால் ஆசி வழங்கி ஆசீர்வதிக்கப்பட்டனர்

கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பங்கு மக்கள் ,என பலர் கலந்துகொண்டனர்.