ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இலங்கைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரை, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் வரவேற்றுள்ளனர்.

இந்த விஜயத்தின்போதே ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதாந்திரிகளை அவர் சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர், கடந்த 29ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.