வினாவிடை போட்டி


மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சென்ட் டி  போல் சபையினால் மட்டக்களப்பு மறைக்கோட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆலோசனை சபையினர்களுக்காக நடாத்தப்பட்ட வினாவிடை போட்டி நேற்று  மட்டக்களப்பில்  நடைபெற்றது 
 

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும்  மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சென்ட் டி  போல் சபையின் போசகருமான  ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்  கீழ்  மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சென்ட் டி  போல் சபையின் ஏற்பாட்டில்  வருடாந்தம் நடாத்தும்  மட்டக்களப்பு மறைக் கோட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பிராந்திய தூய வின்சென்ட் டி  போல் சபையின் ஆலோசனை சபையினர்களுகாக  நடாத்தப்படும் வினாவிடை போட்டி நேற்று  மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது   

மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சென்ட் டி  போல் சபையினால் வருடாந்தம்  நாடத்தப்பட்ட வினாவிடை போட்டி நிகழ்வுக்கு நடுவர்களாக அருட்தந்தை ஜேம்ஸ் , ஆசிரியர் ஆலோசகர் திருமதி . ஜெ .பிளமின் , அருட்சகோதரர் ஸ்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

நேற்று  நாடத்தப்பட்ட வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் எதிர் வரும் 19 ஆம் திகதி பிராந்திய தூய வின்சென்ட் டி  போல் சபையினால் நடாத்தப்படவுள்ள ஒளிவிழா நிகழ்வில் வழங்கப்படவுள்ளன.