கட்டுநாயக்க விமான நிலைய மறுசீரமைப்பு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புத் தொடர்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலையத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

விமான நிலையத்திற்குச் செல்லும் வீதியில் பயணிகள் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்காக அமைச்சர் அந்த சந்தர்ப்பத்தில் பஸ் சேவையொன்றை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை இந்த பஸ் சேவை இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார். அமைச்சர் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தைப் பார்வையிட்டார்.

இதன் போது விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்காக கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம் இரண்டு வருட காலத்திற்குள் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் இந்த ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனத்திற்கு தண்டப்பணம் விதித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்து வேறொரு நிறுவனத்திற்கு வழங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.