தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல்


தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும், காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுவதுடன் கொதித்தாறிய நீரை பருகுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும், இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்