நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானதாகும்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டுவருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு அத்தியாவசியமானதாகும் என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.


அதற்கான சூழ்நிலை தற்சமயம் நாட்டில் ஏற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் எஸ்.பி திஸாநாயக்க ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டு அஸ்கிரிய மற்றும் மலத்வத்து மஹாநாயக்கர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.