மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் வெள்ள நிவாரணப்பணிஅண்மையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மட்டக்களப்பின் தாழ்ந்த பிரதேசங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த இயற்கை அனர்த்தத்தால் வீட்டில் தங்க இயலாத
சில மக்கள்  அருகிலுள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.ராமகிருஷ்ண மிஷனின் சேவை பாரம்பரியத்திற்கேற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்பக்கட்ட நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 குடும்பங்களுக்கு பாய்,ரூபல் , படுக்கை விரிப்பு,ரூபவ் சீனி,ரூபவ் ,பால்மா, நுளம்பு வலை,பிஸ்கட் போன்ற சில அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் தேவைக்கேற்றபடி 06.12.2019 அன்று ராமகிருஷ்ண மிஷனால் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்கொண்டு நிவாரணப்பணிகளை முன்னெடுத்து செல்ல ஆய்வுப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.