நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்

கண்டி, அலவத்துகொட விலான உடுகம பிரதேசத்தை சேர்ந்த நளிந்த லக்சான் விஜேதுங்க என்பவரது மனைவி தேவிகா உதயங்கனி ஜயசூரிய முதல் பிரசவத்திலேயே 4 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் 

பிரசவம் பேராதனை வைத்தியசாலையில் நடந்துள்ளது.
தாயும் குழந்தைகளும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.