22 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு!


22 வகையான மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

குறித்த விலை குறைப்பிற்கு எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெறும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 70 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.