மட்டக்களப்பு புன்னச்சோலையை சேர்ந்த யோகராஜா விஜயராஜா அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

மட்டக்களப்பு புன்னச்சோலையை சேர்ந்த யோகராஜா விஜயராஜா அகில இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால்  14.01.2020 அன்று  நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன்  முன்னிலையில் நாடு முழுவதுக்குமான சமாதான நீதவானாக அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புன்னைச்சோலையை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்ப கல்வியை அமிர்தகழி சித்தி விநாயகர் வித்தியாலயத்திலும் , மற்றும் உயர் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றுள்ளார்.

2012 இல் பொலிஸ் சேவையில் இணைந்து   அக்கரைப்பற்று  சவளக்கடை , அம்பாறை நிலையங்களில்  குற்றப்புலனாய்வு  பொறுப்பதிகாரியாகவும்  , தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவின்  அதிகாரியாகவும் கடமை புரிகிறார் . 

திருகோணமலை NAITA வில் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா , கந்தனை பொலிஸ் அக்கடமியில்  குற்றவியல் டிப்ளோமா , குண்டசாலை பொலிஸ் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமா ஆகிய கற்கை நெறிகளை கற்றுள்ளார்.

இவர் பல்வேறு பொது அமைப்புக்களின் உறுப்பினராகவும், சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வருகிறார் .