புதிய நோயை பரப்பும் நுளம்பு வகை கண்டுபிடிப்பு!


நோயைப் பரப்பக்கூடியதாக சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என்று அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது கண்டுபிடிக்கப்பட்டதைத் அடுத்து இலங்கையில் பதிவாகியுள்ள விசேட நுளம்புகளின் எண்ணிக்கை 154 ஆகும்.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த நுளம்பை கண்டறிவதற்கு விசேட ஆய்வு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.