தம்பதியைக் கட்டி வைத்து கொள்ளை!


மன்னார் எழுத்தூர் பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்­பவம் தொடர்பில் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை­களில் ஒரு பகுதி கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி எஸ்.கிரு­ஷாந்தன் தெரி­வித்தார்.

மன்­னாரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்­பவம் தொடர்பில் அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், மன்னார் எழுத்தூர் பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் தம்­ப­தி­யி­னரை கட்டி வைத்து விட்டு சுமார் 25 பவுண் தங்க நகைகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக மன்னார் பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வந்­தனர்.

இதற்­க­மை­வாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பந்­துல வீர­சிங்­கவின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக மன்னார் பொலிஸார் தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர்.

அதற்­க­மை­வாக யாழ்ப்­பா­ணத்தில் வைத்து பிர­தான சந்­தேக நபர் ஒருவர் உட்­பட மூவர் கைது செய்­யப்­பட்­டனர்.

கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை­களை ஈடு­வைக்கச் சென்ற போது குறித்த மூவரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.அவர்­களில் ஒருவர் கொள்ளைச் சம்­ப­வத்­துடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டவர் என ஆரம்ப கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வருகிறது. தொடர்ந்தும் பொலிஸார் தீவிர விசார ணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.