ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!


ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (14) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.