மதிப்பிடப்பட்டதிலும் பார்க்க பெரும்போக நெல் உற்பத்தியில் அமோக விளைச்சல் !

பெரும்போக நெல் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது. விவசாய திணைக்களம் எதிர்பார்த்ததிலும் பார்க்க இம்முறை 2.97 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 3.07 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி பெறப்பட்டது. இந்த எண்ணிக்கையினை எட்டக்கூடியதாக இம்முறை பெரும்போக அறுவடை அமைந்துள்ளது. விவசாய திணைக்களம் இம்முறை பெரும்போகத்தின் மூலம் 2.4 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளது.

இம்முறை பெரும்போக உற்பத்தி மூலமான அரிசி 9.5 மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். சிறுபோக அறுவடையின் மூலம் 1.5 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி பெறப்படும்.

756,840 ஹெக்டயர் வயல் காணி மூலம் 2020 டிசம்பர் மாதம் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுமார் 27,059 ஹெக்டயர் வயல் காணி மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.