பெண்கள் தலைமைத்துவம் !

(LEON)
பெண்கள் தலைமைத்துவம் ,பெண்களின் பாதுகாப்பிற்கான சட்ட தொடர்பாக
மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில்
நடைபெறுகின்றது . மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சட்டத்தரணியும் , அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரான திருமதி . மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இன்று நடைபெறுகின்றது.

அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் மேம்பாட்டு தொடர்பாக பல
செயல்திட்டங்களை முன்னெடுத்து வ்ருகின்றது, இதன் ஒரு செயல்
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெண்கள் தலைமைத்துவம் ,பெண்களின்
பாதுகாப்பிற்கான சட்ட தொடர்பான செயலமர்வுகள் நடாத்தப்பட்டு
வருகின்றது. இதற்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து அதிபர்கள் ,ஆசிரியர்களினால் தெரிவு செய்யப்பட்ட
மாணவர்களுக்கான பெண்கள் தலைமைத்துவம், பெண்களின்
பாதுகாப்பிற்கான சட்ட தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு நடாத்தப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் நிர்வாக
பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி .சுஜாதா குலேந்திரன் ,தென்கிழக்கு
பல்கலைக்கழக பொறியியல் பீட்டா சிரேஷ்ட விரிவுரையாளர் இஸ்ராத் ஆதம்
லெப்பை , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல்
ஆலோசனை உத்தியோகத்தர் அழகையா ஜெகநாதன் மற்றும் அருவி
பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.