ஒருவித மாயையில் உள்ள கதாபாத்திரங்களா நாம் ?, 'Elon Musk' இன் கதை

இன்றைய குழந்தைகளுக்கு Marvel studios இன் Avengers தொடர்களில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் எப்போதும் புதுமைகளை சாதித்து காட்டும் Iron Man ஐ கொஞ்சம் அதிகமாகவே பிடித்து போகிறது. இந்த Iron Man கதாபாத்திரம் போலவே நிஜ உலகில் தன் கனவுகளை அடைய ஈடுபாட்டுடன் செயற்பட்டு அதில் போராடி வெற்றிகளையும் குவித்து வரும் Elon musk ஐ பற்றி அறிந்தவர்கள் அனைவருக்குமே அவரை பிடித்து தானிருக்கும். எல்லோரும் அவரை ஒரு super hero வாக பார்க்க அவரோ 'நாம் எல்லாம் Simulation இல் இருக்கும் கதாபாத்திரங்கள் என நான் நினைக்கிறேன்" என்கிறார்.

வீடியோ விளையாட்டுக்களில் கொண்டிருந்த அதீத ஆர்வம் அவரை இப்படி சிந்திக்க தூண்டி இருக்கலாம். யார் கண்டது ?  ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு நம்பிக்கையுடன் இத்தனை சாதனைகள் புரிய இவரால் எப்படி முடிந்தது என்பதே புரியாத புதிர். Elon அப்படி என்னதான் இவர் சாதித்து விட்டார் என்று பார்க்கலாமா ?

Elon 1971ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி தென் ஆபிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர். தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். இருந்தாலும் இவரது குழந்தைப்பருவம் அத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கவில்லை. 

நிறைய தடங்கல்களை சந்தித்தார். பாடசாலையில் சக மாணவர்களால் (bulling) தாக்கப்பட்டு மூர்ச்சையுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனுபவம் அவருக்கு உண்டு. எப்போதும் தாக்கும் கிண்டல் கேலிகளில் இருந்து விலகவோ என்னவோ புத்தகங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் மகனை காணவில்லை என்றால் தாய் மே மஸ்க் நேராக வீட்டிற்க்கு அண்மையிலுள்ள நூலகங்கள் இரண்டில் ஏதாவது ஒன்றில் Elon ஐ கண்டுபிடித்து விடுவார். 

நூலகத்தில் இருந்த புத்தகங்களை வாசித்து முடித்து மேலும் புதிய புத்தகங்கள் இருக்கிறதா ? என கேட்பாராம் Elon. வாசிக்க புத்தகங்கள் கிடைக்காத காரணத்தினால் Encyclopedia வை முழுதாக வாசித்து முடித்தார் என்றால்
புத்தகங்கள் மீதான Elon musk இன் காதலுக்கு வேறு சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமா ? கருத்து வேறுபாட்டால் Elon இன் பெற்றோர் விவாகரத்து பெற கண்டிப்பான தந்தையுடன் தனியாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கணனியில் ஈர்ப்புக் கொண்டு புத்தகங்கள் வாயிலாக சுயமாக Coding கற்று 12 ஆவது வயதில் blastar என்ற வீடியோ விளையாட்டை எழுதி அதனை விற்று Elon பெற்ற முதல் சம்பளம் $500 டொலர்கள். இன்றும் கூட நீங்கள் blastar விளையாட்டை online இல் காணலாம். புத்தகங்களால் விண்வெளி பற்றியும் விண்வெளியில் மனிதன் வாழலாமா? என சிந்திக்க தூண்டப்பட்டார். அக்காலத்தில் நடந்த விண்வெளி ஆய்வுகளின் படி நிலவில் வாழ்வது சாத்தியமற்றது என நிரூபிக்கப்பட செவ்வாயை நோக்கி சிந்திக்க தொடங்கினார் மஸ்க். 

தென் ஆப்பிரிக்காவின் கொள்கைகள் பிடிக்காததால் குடிபெயர்ந்து கனடாவில்
ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும் பின்னர்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.

இருந்தாலும் அக்காலத்தில் இணையத்தின் (internet) அபரிதமான வளர்ச்சி Elon musk ஐ ஈர்த்தது. எனவே வியாபார நோக்கமாக ஏதேனும் சாதிக்கலாம் என எண்ணி பல்கலைக்கழக படிப்பை அங்கு இணைந்த இரண்டே நாட்களில் கை விட்டார். மஸ்க் அவரது சகோதரர் ஒருவருடன் இணைந்து 1905 இல் தந்தை கொடுத்த $28000 டொலர்களில் Zip2 என்ற நிறுவனத்தை நிறுவினார். அவர் கொண்டிருந்த இலக்கு yellow pages (All information of local businesses) ஐ இணையமயப்படுத்துவது. 

வியாபார உலகுக்கு இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் இந் நிறுவனத்தின் CEO பதவியை Musk அடைய முயற்சி செய்ய, ஏனைய பங்குதாரர்கள் சமயம் பார்த்து 1999இல் CompaQ என்ற நிறுவனத்திற்கு Zip2 ஐ விற்று விட அதில் muskக்கு வெறும் 7% க்கான பங்காக 22 மில்லியன் டொலர்கள் கிடைத்தது. இதை எண்ணி திருப்திப்படவோ கவலைப்படவோ
அவருக்கு நேரம் இருக்கவில்லை. அதே வருடத்திலேயே $10 மில்லியன் டொலர்கள் முதலிட்டு X.com எனும் இணைய பணப்பரிமாற்ற தளத்தை (online transaction website) ஆரம்பித்தார். சமகாலத்தில் போட்டிக்குரிய நிறுவனமாக இருந்த PayPal உடன் X.com ஐ இணைத்து PayPal என்ற பெயரிலேயே தொழிற்பட ஆரம்பித்து ஒரு மாத காலத்திலேயே ஒரு மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனம் ஆனது. 

இருந்தாலும் அதிரடியான முடிவுகளை எடுக்கும் Elon க்கும் நிர்வாகத்தினருக்கும் எப்போதும் இருந்து வந்த பிரச்சனைகள் அவரது CEO பதவியை தட்டி பறித்தன. இதனால் 2002 இல் PayPal லும் விற்பனையாகும் நிலைக்கு வர, eBay அதை வாங்கி கொண்டது. ஏனெனில் eBay யின் கால்வாசிக்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றம் PayPal மூலமே நடந்து கொண்டிருந்தது.

இதில் Elon யின் 11.7% பங்கு $180 டொலர்கள் கிடைத்தது. இந்த பணத்தை வைத்து கொண்டு Elon musk தனது சிறுவயது கனவு நோக்கிய படிகளில் முன்னேற தொடங்கினார். மனிதகுலத்தினை ஒரு பல்-கிரகவாசியாக (multi-planetary species) மாற்றி செவ்வாயில் குடியேற்றுவதே அவரின் இலட்சியம். இந்த இலட்சிய பயணத்தின் முதல் படியாக 3 நிறுவனங்கள் உருவாகின. அவை தான் SPACEX, TESLA, SolarCity. 

இதற்காக musk தனக்கு கிடைத்த பங்கில் $100 மில்லியனை SPACEX இலும், $60 மில்லியன் டொலர்களை புவிவெப்பமாதலை தடுக்கும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் electric கார்களை உற்பத்தி செய்ய டெஸ்லாவிலும், $20 மில்லியன் டொலர்களை சூரியசக்தியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் SolarCityயிலும் போட்டு விட்டு வீட்டு வாடகை கொடுக்க பணம் இன்றி கடன் வாங்கும் நிலைக்கு ஆளானார். விண்வெளி எனும் மகா சாம்ராஜ்யத்தை ஆள உலக வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டிருந்தவேளை தனியொருவனாக ரஷ்ய விஞ்ஞானிகளிடம் சென்று

முதல் முறையாக "செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற ஏற்றவாறு ஒரு விண்கலத்தை(Rocket) செய்து தர முடியுமா" என கூலாக கேட்டாராம். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவே முட்டி மோதும் ஒரு விடயத்தை கேட்கும் இந்த தனி மனிதனை அதிசயமாக பார்த்து சிரித்தார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள். தொழிலதிபராக இருந்த Elon படிப்படியாக தனது கனவை நனவாக்க திட்டமிட்டுக்கொண்டார். சிறிய ரக விண்கலங்களை முதலில் தயாரிக்க எண்ணினார். ஒரு விண்கலத்துக்கு 8 மில்லியன் டொலர்கள் செலவாகும் என விஞ்ஞானிகள் சொன்ன போது கனவுகளுக்கு budget
போடும் Elon க்கு சொந்தமாகவே விண்கலம் தயாரித்தால் இதைவிட குறைந்த செலவில் வேலையை முடிக்கலாம் என்று தோன்றியது. இதுவே Spacex இன் தோற்றத்திற்கு வித்தாய் அமைந்தது. 

தனியொரு மனிதன் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்ப முனைவதை நக்கலாக பார்த்து சிரித்தது உலகம். ஒரு சிலர் "இவன் வேற்று கிரக வாசி
என்பதால் தான் தாயகம் போக தவிக்கிறான்" என்றே முடிவு கட்டினர்.
இதுவரை காலமும் அனுப்பப்பட்ட விண்கலங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தது. இதை மாற்றி மீண்டும் மீண்டும் பயன் படுத்தகூடிய விண்கலங்களை உருவாக்கி அவற்றை நிலத்தில் திரும்ப தரையிறங்க செய்யும் முயற்சியில் இறங்கினார் Elon. 

2006 இல் முதல் விண்கலம் Falcon 1 வானில் தான் பயணத்தை தொடங்கி சில
நிமிடங்களில் வெடித்து சிதறியது. இரண்டாவது கலமும் என்ஜின் கோளாறால் கடலில் விழ.. 3 முறை தோற்றது SPACEX. 2007-2008 க்கிடைப்பட்ட இக்காலப்பகுதி Elon க்கு சோதனை காலமாக அமைந்தது.காதல் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டது. டெஸ்லாவில் ஒரு வாரத்திற்கான அளவு பணமே கையில் இருந்தது. இதனால் மேலும் மேலும் கடன்களுக்கு ஆளானாலும் மனம் தளராத Elon 4 ஆவது முறைக்காக 2008 இல் நாசா ஒரு
செயற்கை கோளை மிக குறைந்த கட்டணத்துக்கு விண்ணில் அனுப்ப Spacex
நிறுவனத்திற்கு இறுதி சந்தர்ப்பம் அளித்தது. கொடுத்த கையை இறுக பற்றி
பயன்படுத்திக் கொண்டார் Elon. 

ஆய்வு நிலையத்தில் திரையினூடாக விண்கலம் Falcon 9 மெலெழுவதை பார்த்து கொண்டிருந்த Elon ஆர்வ மிகுதியால் குழந்தை போல வெளியே
ஓடிவந்து அது வெற்றிகரமாக தரையிறங்கும் காட்சியை பூரிப்புடன் பார்த்தார். அதன் பின் Elon musk இன் பயணம் வெற்றிப் பயணமாக இன்று வரை தொடர்கிறது. அண்மைக்கால மைல் கல்லாக Elon இன் Falcon heavy அவரே வடிவமைத்த டெஸ்லா வின் roadster car ஐ ஒரு Starman உடன் சேர்த்து விண்ணுக்கு ஏவியது ஆகும். 

இப்போது Elon Musk போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் The boring company, hyperloop போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்துடன் artificial intelligence சம்பந்தமாக ஆய்வுகள் மற்றும் உற்பத்திகளை செய்ய OpenAI, Neuralink ஆகிய நிறுவனங்களையும் நிறுவி செயலாற்றி வருகிறார். டெஸ்லா மோட்டார் ஸின் அடுத்த இலக்கு சுயமாகவே தன்னை ஓட்டிச் செல்லும் கார்களை அறிமுகப்படுத்ததுவதாகும். பல தடைகளை தாண்டி விடா முயற்சியின் மொத்த வடிவமாய் திகழும் Elon musk, இன்று

40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து பெறுமதியுடன் உலகின் 23 ஆவது
பணக்காரராகவும், Forbes சஞ்சிகையில் 2016 ஆம் ஆண்டு உலகின் மிக வலிமையான மனிதர்களில் 21 ஆவது இடத்தையும், 2019 ஆம் ஆண்டு உலகின் புதுமையான தலைவர்கள் (world most innovative leaders) வரிசையில் முதல் இடத்தையும் பிடித்துக்கொண்டார். இத்தனையும் அவரை திருப்திப்படுத்த தியதாக எண்ணுகிறீர்களா ?. இல்லவே இல்லை அவர் இன்னமும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் இலக்கை நோக்கி தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.

சிறுவயதில் தான் புத்தகங்களில் படித்த super hero க்களின் கதைகளில் அவர்கள்
உலகையும் உலக மக்களையும் அழிவில் இருந்து காக்கும் அதியங்களை தானும் நிகழ்த்த ஆசைகொண்டு.. அதை அண்மித்து சென்று கொண்டிருக்கும் Elon musk நிஜ உலகின் Iron Man என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


இப்படைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...
தொடர்புகளுக்கு - naananaamikka@gmail.com
என் அனாமிகா,
தகவல் தொழில்நுட்ப பீடம்,
மொறட்டுவை பல்கலை கழகம்.