எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதிவரை பொதுமக்கள் அவதானமாக இருக்கவும் !

எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதிவரை கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் நிறைந்த காலப்பகுதியாக அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிக அவதானம் நிறைந்த பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 10ஆம் திகதிவரை கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதால் குறித்த மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், இந்த காலப்பகுதியில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.