மட்டக்களப்பு மாவட்டம் பணிச்சங்கேணி தடுப்பு முகாமில் இருந்து 34 பேர் விடுவிப்பு !இராணுவத்தினரின் பஸ் மூலமாக பணிச்சங்கேணி கொரோனா தடுப்பு முகாமில் இருந்து 34 பேர் இன்று காலை 07.00 மணியளவில் நீர்கொழும்பு, கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம்  வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பணிச்சங்கேணி கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்கும் பணி இன்று மேற் கொள்ளப்பட்டது 

தங்க வைக்கப்பட்டிருந்த 38 பேரில் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் 34 பேர் இன்று விடுவிக்கப்பட்டதுடன் மீதமாக இருந்த நான்கு பேரும் புனானை தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .