திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு தெளிகருவி வழங்கி வைப்பு !

(கதிரவன்)
கொரோனா தொற்றை தடுப்பதற்காக திருகோணமலை மாவட்டத்தில் 10 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு தலா ஒவ்வொரு தெளிகருவிகள் வழங்கப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதி அமைச்சர் சுமந்த புஞ்சிநிலமே இதனை இன்று புதன்கிழமை 2020.03.25 வழங்கி வைத்தார். இதற்கு முன்னதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வி.பிறேமானந்த் இடம் அவசர சுகாதார சேவைகளை முன்னெடுப்பதற்காகவும் தனது அலுவலகத்தின் பின் உள்ள கட்டிடத்தை கையளித்தார். நகர சபை தலைவர், பட்டனமும் சூழலும், கந்தளாய், வெருகல், சேருவில பிரதேச சபைகளின் தலைவர்கள் தமது பகுதிக்கான தெளிகருவிகளை முன்னாள் அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.