கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிலைமையில் தேர்தல் பொருத்தமற்றது - துரைராசசிங்கம்

மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் வெவ்வேறு விதத்தில் மனநிலை, உடல்நிலை, பொருளாதார நிலை என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலைமையில் தேர்தல் பொருத்தமற்றது. அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடவடிக்கைகளை விலத்தி வைப்பதே பொருத்தமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்பர்கள் இவ்விடயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உரிய முடிவினை எடுத்து, அவசர நிலையைக் கருத்திற் கொண்டு கலைத்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மருத்துவத்துறை மூலம் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்ற நெறிவுறுத்தல்களை ஒவ்வொருவரும் கடைப்பிடித்து தம்மையும், தம்மைச் சுற்றியுள்ளவர்களையும், முழு நாட்டையும் பாதுகாக்கும் சிறந்த உளப்பாங்குடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு தற்போது அவசரகால நிலைமையில் உள்ளது. உலக நாடுகளில் 188க்கும் மேற்பட்ட நாடுகள் இதே நிலையில் அல்லது இதை விட நெருக்கடியான நிலையில் உள்ளன. உலகளவில் மரணங்கள் 16000ஐ எட்டியுள்ளன. தொற்றுக்குள்ளானோர் 360000 வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

இது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களே பெருமளவில் காணப்படுகின்றன. இந்தக் கொரோண பீதி இலங்கையையும் விட்டு வைக்கவில்லை தற்போது வரையில் சுமார் 96 பேர் வரை இக்கொரோணா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும், அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைந்திருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து கண்காணிக்கப்படுவதோடு, தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் பய உணர்வே காணப்படுகின்றது.

இந்த நிலைமையில் இலங்;கையில் தேர்தல் நடத்துவது அல்லது தேர்தலுக்கான ஆயத்தங்களைச் செய்வதென்பது பொருத்தமானதல்ல. தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை குறைந்தது ஆறு மாதத்திற்குப் பின்புதான் ஏற்படலாம். எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தேர்தலை இத்தனை நீண்ட காலத்திற்கு ஒத்திப் போட முடியுமா? என்பதை தேர்தல் குழு ஆலோசிப்பதோடு அது சாத்தியமாகாத பட்சத்தில் தேர்தலை ரத்துச் செய்வதற்கான பரிந்துரை தொடர்பில் ஜனாதிபதியோடு பேசுவது பொருத்தமானது.

அதேவேளை நெருக்கடி நிலைமைகளில் கலைத்த பாராளுமனறத்தையும் கூட்டலாம் என்பதற்கு அமைவாக ஜனாதிபதி அவர்கள் உரிய சுகாதார நெறிவுறுத்தல்களுக்கு அமைய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது. உலகப் போhக்காலங்களில் இவ்வாறான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில நோக்கினால் எமது பாராளுன்றத்தை அதனுடைய எஞ்சிய காலம்வரை நீடிக்கச் செய்து அதற்குப் பின் கலைத்து புதிய தேர்தலொன்றைப் பிரகடணப்படுத்துவது பொத்தமானதாக இருக்கும்.

 மக்கள் கொரோணா வைரஸ் தொடர்பில் வௌ;வேறு விதத்தில் மனநிலை, உடல்நிலை, பொருளாதார நிலை என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். எனவே இவ்விடயங்களைச் சீர்தூக்கி ஆராய்ந்து அன்றாடம் உழைத்துப் பிழைக்கின்ற மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்காள்ள வேண்டும்.

 உலகம் இதுவரை உலகம் எதிர்நோக்கிய கொள்ளை நோய்களை விட பயங்கரமான ஒன்றாக கொரோணா வைரஸ் தாக்கம் இருக்கின்றது. ஆனால் ஒவ்வொருவரும் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் முழுச் சமுதாயத்தையும் பாதுகாக்கின்ற வாய்ப்பு மருத்துவத்துறை மூலம் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த விழிப்பூட்டல்கள் நிறையவே மக்களை வந்தடைந்த வண்ணம் உள்ளன. இவற்றை மதித்து ஒவ்வொருவரும் நெறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து தம்மையும், தம்மைச் சுற்றியுள்ளவர்களையும், முழு நாட்டையும் பாதுகாக்கும் செயற்பாட்டில் சிறந்த உளப்பாங்குடன் செயற்படுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.

 தற்சமயம் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் எல்லாவகையிலான தேர்தல் நடவடிக்கைகளையும் விலத்தி வைப்பதே பொருத்தமானது. முகநூல் ஆர்வலர்கள் முக்கியமாக இந்த விடயத்தக் கவனத்திற் கொண்டு தேர்தல் தொடர்பான செய்திப் பகிர்வுகளை நிறுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்பர்கள் இவ்விடயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.