பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கொரோனாவிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான விசேட பூஜை

(ரவிப்ரியா)
இலங்கை திருநாட்டில் எற்பட்டுள்ள கொவிட் - 19 வைரசிலிருந்து தாய்நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான அருள் வேண்டி பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில், ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் புதனன்று (18) மாலை 7.00 மணியளவில் விசேட பூஜை ஒன்று ஆலயத்தின் கணக்குப்பிள்ளை வில்லியம் ஈஸ்வரதாஸ் தலைமையில் மிகவம் எளிமையான முறையில் ஆலய பிரதமகுரு சிவாகமரெத்னா சிவஸ்ரீ இரா.கு. நடேசடுணஸ்காந்த குருக்கள் பூஜை செய்வதைப் படங்களில் காணலாம்.

கொரனாவைக் கட்டுப்படத்தும் அரசின் அறிவுறுத்தல்களை அனுசரித்து மிகுந்த சமூகப் பொறுப்புடன் இப் பூஜை எவ்வித விளம்பரமுமின்றி ஆலய போற்றிகுடி தலைவர் குமாரசாமி கோகுலசிங்கம், தேவாரம் இசைப்பதற்கான பெண், ஊடகவியலாளர் ஆகியோர் உட்பட மிகக் குறைந்தளவு பக்தர்களுடனேயே இந்த பூஜை நடைபெற்றது.

பூஜை முடிவில் பிரதம குருவால் காளாஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

பக்தர்கள் இல்லாத பூஜையாக இருந்தபோதும் சக்திமிக்க சர்வார்த்த சித்தி விநாயகர் சுனாமி பேரழிவிலிருந்து கிராமத்தையும் மக்களையும் காத்தருளியது போல் கொடிய கொரோனாவில் இருந்தும் எமது மக்களை மட்டுமல்ல இந்த அழகிய நாட்டையும் சகல மக்களையும் இந்த விசேட பூஜையின் மூலம் காத்தருள்வார் என ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜா முழு நம்பிக்கை தெரிவித்தார்.